பதவி ஏற்பு? தமிழக ஆளுநருடன் தலைமைசெயலாளர் திடீர் சந்திப்பு!

சென்னை:

ரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.

ஓபிஎஸ் இபிஎஸ் அணிகள் இணைப்பு அறிவிப்பு வெளியாக இருக்கும் சூழலில், இரு தரப்பின ருக்கும் இடையே ஏற்பட்டுள்ள உடன்பாடை தொடர்ந்து  ஓபிஎஸ் துணைமுதல்வராக பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று மதியம் சென்னை வந்துள்ள தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சந்தித்து பேசி வருகிறார்.

இரு அணிகள் இணையவுள்ள நிலையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு தொடர்பாக ஆளுநரிடம் தெரிவிக்க தலைமைச் செயலாளர் சென்றுள்ளதாகவும், பதவி ஏற்புக்கான ஏற்பாடுகளை செய்ய அவர் ராஜ்பவன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக இன்று மாலையே புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என எதிர்பார்க்கப்படு கிறது.
English Summary
sworn new ministers? tN Chief secratary meet with Governor vidyasagar rao