டெல்லி: நாடாளுமன்ற  பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31-ந்தேதி தொடங்குவதாக பாராளுமன்ற செயலாளர் அறிவித்து உள்ளார். தொடர்ந்து பிப்ரவரி 1ந்தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பு காட்டி வருகின்றனர். ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக கூட்டணி முயற்சித்து வரும் நிலையில், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் இண்டி கூட்டணி ஆட்சியை கைப்பற்ற முயற்சிகளை எடுத்து வருகிறது.

இந்த பரபரப்பான சூழலில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 30ந்தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படாது. அதனால்  இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.

ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் முர்மு உரையாற்றுகிறார்.  இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். பின்னர் நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை   தாக்கல் செய்கிறார்.

அதைத்தொடர்ந்து,  மறுநாள், அதாவது பிப்ரவரி 1-ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படாது. அதற்கு பதிலாக இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.  இதில் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை பாஜக வெளியிட வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து,  பிப்ரவரி 2ந்தேதி முதல்,  ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்‘, பட்ஜெட் மீதான விவாதம் உள்ளிட்ட அலுவல்கள் நடைபெறுகின்றன. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 9ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் உள்ளிட்ட அலுவல்கள் 9-ந்தேதி வரை நடைபெறுகிறது.