சென்னை,

ல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் இளைஞர்களின் போராட்டம் நீடித்து வருகிறது.

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராடி வரும் வேளையில், அதிமுகவினர் கவுரவ பிரச்சினையாக ஜல்லிக்கட்டு போராட்டத்தை தன்னிச்சையாக நடத்தி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கோரி லட்சக்கணக்கானவர்கள் சென்னை மெரினாவில் கூடியுள்ள னர். இன்றும் காலை முதலே மெரினாவை நோக்கி இளைஞர்கள், பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள்.

ஆனால் இளைஞர்களின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில், மெரீனா கடற்கரையில் திடீரென ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை முதலே 10,000க்கும் மேற்பட்ட போலீசார் மெரினா கடற்கரை பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதால் மிகுந்த பதட்டத்தில் உள்ளது மெரினா பகுதி.

போராட்டக்காரர்களும் சுமார் 2 லட்சம் பேரை வரை மெரினாவில் குவிந்துள்ளதால், எந்த நேரம் என்ன நடக்குமோ என பதற்றமாக சென்னை காணப்படுகிறது.

ஆனால், இளைஞர்களோ எங்களது அறவழி போராட்டம் தொடரும் என்று அறிவித்து உள்ளனர்.