சென்னை,

ற்போது தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு  மற்றும் ரேக்ளா போட்டியானது அதிமுகவினர்  நடத்தும் போட்டி என்று போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தடை கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

ஆனால், தமிழக முதல்வரோ ஜல்லிக்கட்டை நானே தொடங்கி வைப்பேன் என்று அலங்கா நல்லூர் சென்றார். ஆனால், அவரை உள்ளே செல்ல பொதுமக்கள் அனுமதிக்கவில்லை.

இளைஞர்கள் மீண்டும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால், இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் ஒருசில இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. சில இடங்களில் ரேக்ளா போட்டிகளும் நடைபெறுவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

பெரும்பாலான மக்கள் ஆதரவின்றி நடைபெற்று வரும் இந்த போட்டிகளை அந்த பகுதி அதிமுகவினரே  நடத்தி வருவதாகவும், அவர்களுக்கு பின்புலமாக பாரதிய ஜனதா கட்சியினரும் இருப்பதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தமிழக அரசு இந்த விசயத்தில் கவுரவ பிரச்சினையாக கருதி, வீம்புக்காக கட்சியினரை கொண்டு ஜல்லிக்கட்டு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.