சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் தமிழ்நாடு விரைவில் குடிகாரர்களைக் கொண்ட மாநிலமாக மாறி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்கு மட்டும் ரூ.467 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

நடப்பாண்டு,  தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 2 நாட்களில் தமிழ்நாட்டில் ரூ.467 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட கூடுதலாகும்.

நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடத்தப்படுவதாக அரசு கூறுத்ம டாஸ்மாக் கடைகள், 24மணிநேரமும் இயங்கி வருகிறது என்பதே உண்மை நிலவரம். இதுமட்டுமின்றி, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட எந்த பண்டிகை வந்தாலும், மக்களின் வாழ்வதாரத்தை கண்டுகொள்ளாமல், வருமானத்தை மட்டுமே இலக்காக கொண்டு, மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயித்து வருமானத்தை ஈட்டுவதிலேயே தமிழ்நாடு அரசு குறிக்கோளாக செயல்பட்டு வருகிறது.

தமிழக அரசுக்கு நிதி வருவாயை ஈட்டி தருவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது டாஸ்மாக் கடைகள். தமிழனை குடிகாரனாக்கி அதன்மூலம் மாநில அரசு கல்லா கட்டி வருகிறது. இதற்கிடையில் இலவசங்களையும் வாரியிறைத்து மக்களை சோம்பேறியாக்கி தங்களது வாக்குகளை பெற்று வருகிறது. சாதாரண கூலித்தொழிலாளி, அன்றாடங்காய்ச்சிகள் முதல் சொந்த தொழில்புரிவோர் ஏழை பணக்காரன் படித்தவன் பாமரன் ஏன் பிச்சை எடுப்பவர்கள், பெண்கள் என எவரையும் டாஸ்மாக் நிறுவனம் விட்டுவைக்கவில்லை என்பதே தமிழ்நாட்டின் சாபக்கேடாக உள்ளது. பலர் டாஸ்மாக் மதுபானம் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை தொலைத்து விட்டு, மது அடிமையாகி போனதன் விளைவு இன்று வடக்கன்கள் அனைத்து பணிகளையும் ஆக்கிரமித்துள்ளனர் என்பதே உண்மை நிலவரம்.

இந்தியாவில் மதுவின் வியாபாரம் ரூ.1.4 லட்சம் கோடிகள். தமிழகத்தின் பங்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடிகள். தமிழக மக்கள் தொகை சுமார் 8 கோடி பேர் மூலம் அரசுக்கு டாஸ்மாக் விற்பனை ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடிகள். நம்மை விட பெரிய மாநிலமான 20 கோடி மக்கள் தொகை கொண்ட உத்தர பிரதேசத்தின் மது விற்பனை ஆண்டுக்கு ரூ.12,000 கோடிகள் மட்டுமே. குடி வெறி கொண்டு அலையும் கூட்டமாக தமிழ்நாடு மாறி விட்டதே உண்மை.

தமிழ்நாடு அரசுக்கு டாஸ்மாக் மது விற்பனை மூலம் கடந்த ஆண்டு (2021 – 2022) 36,000 கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருந்தது. இது கடந்த ஆண்டு மேலும் அதிகரித்து. அதாவது, கடந்த  2003 – 2004ஆம் ஆண்டில் 3639.93 கோடி ரூபாயாக இருந்த தமிழ்நாடு அரசின் வருவாய், ஆண்டு தோறும் அதிகரித்து வந்துள்ளது.

இந்த நிலையில் நடப்பாண்டு,  தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 2 நாட்களில் தமிழ்நாட்டில் ரூ.467 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட கூடுதலாகும்.

நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடத்தப்படுவதாக அரசு கூறும் டாஸ்மாக் கடைகள், 24மணி நேரமும் இயங்கி வருகிறது என்பதே உண்மை நிலவரம். மேலும் பார்களும் எப்போதும் திறந்தே காணப்படுகிறது. இதுமட்டுமின்றி, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட எந்த பண்டிகை வந்தாலும், அதற்கு விற்பனை இலக்கு நிர்ணயித்து வருமானத்தை ஈட்டுவதிலேயே தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகிறது.

தமிழ்நாட்டின் இன்றைய நிலவரம் குடிக்காத மக்களை கேவலமாக பேசும் அளவிற்கு தமிழ்நாட்டில்  கலாச்சாரம் மாறி வருகிறது.  அதேபோல் வார கடைசி நாட்கள், டாஸ்மாக் கடை ஏதேனும் தலைவர்கள் பிறந்தநாள், திருவிழா உள்ளிட்ட காரணங்களுக்காக மூடப்படுவதற்கு முதல் நாள் என விற்பனை ஜோராக நடைபெறும். வீடுகளிலேயே குடும்பத்துடன் அமர்ந்து மது குடிக்கும் கலாச்சாரம் பெருகி வருகிறது. முந்தை காலத்தில் உடல் உழைக்கும் வர்க்கத்தினர், தங்களது உடல்வலியை போக்க சிறிது மது எடுத்து வந்த நிலையில், தற்போது மது குடிப்பதே கலாச்சாரமாக மாறிவிட்டது. முதியவர்கள், நடுத்தர மக்கள் மட்டுமின்றி,  பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பெண்கள், மாணவிகள் மத்தியிலும் குடி கலாச்சாரம் மெகாத் தொடர் போல தொடர்ந்து வருகிறது.   தமிழக கலாச்சாரம் எங்கே போகிறது என்ற கேள்வியை உலகத் தமிழர்கள் வேதனையுடன் கேட்கும் அளவிற்கு செய்து விட்டது.

மதுவினால், ஆண்டுக்கு சுமார் 25% பேர் சர்க்கரை, இதய நோயாளிகளாக வீட்டில் முடங்கி வருகின்றனர். இதேபோல், தமிழனின் ‘ஆண்மை’யையும் விலை பேசி வருகின்றன என்பதே இன்றைய நிலவரம்.

இந்த நிலையில் நேற்று (நவம்பர் 12) தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களில் ரூ.467 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இதில் 11ஆம் தேதி 221 கோடி ரூபாய்க்கும், 12 ஆம் தேதி 246 கோடி ரூபாய்க்கும் விற்பனை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

நவம்பர் 11 ஆம் தேதி மதுரையில் ரூ.52.73 கோடி, சென்னையில் ரூ.48.12 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. மேலும,  கோவையில் ரூ.40.20 கோடி, திருச்சியில் ரூ.40.02 கோடி, சேலத்தில் ரூ.39.78 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றதாகவும்,

நவம்பர் 12 ஆம் தேதி  சென்னையில் ரூ.52.98 கோடி, மதுரையில் ரூ.51.97 கோடி, சேலத்தில் ரூ.46.62 கோடி, கோவையில் ரூ.39.61 கோடிக்கும், திருச்சியில் ரூ.55.60 கோடி வசூலாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுகுறித்து அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

மண்டல அளவை பொறுத்தவரை மதுரை, திருச்சி மண்டலங்களிலேயே அதிக அளவில் மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படு கிறது. 2021 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரூ.431.03 கோடிக்கு மது விற்பனை நடைபெற்ற நிலையில், 2022 ஆம் ஆண்டு ரூ. 464.21 கோடியாக அதிகரித்தது. இந்நிலையில் இந்தாண்டு மதுவிற்பனை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நீர் மேலாண்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய தமிழர்கள், இன்று சரக்கு சாராய நீர் இல்லாமல் தூங்க முடியாத போதைக்கு அடிமையாகி விட்டனர். பொதுவாக போதை தரும் பானங்களைக் குடித்தால், உடலும், மனமும் தங்கள் கட்டுப்பாட்டை இழந்துவிடும் என்பது ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், இன்று தமிழ்நாட்டின் இளைய சமூதாயமே போதைக்கு அடிமையாகி வருகிறது. முன்பெல்லாம் குடும்பத்தலைவர், அதாவது கணவர் என்றாவது ஒரு நாள் குடித்து விட்டு வீட்டிற்கு வருவார் என்று சொன்ன காலமெல்லாம்  மறைந்து போய், இன்று குடும்பத்தோடு குடித்து கும்மாளமடிக்கும் நிலை உருவாகி உள்ளது.  பெரும்பாலான குடும்பத்தை  ‘குடி’ ஆக்கிரமித்துள்ளது.

இது ஒர புறமிருக்க வருமானம் இல்லாத நிலையில் குடும்பத்தில் குழப்பம் சண்டை,திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளை என்று சமூக பிரச்னையாக வெகு விரைவில்உருவெடுக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

பொதுவாக மக்களை வாழ வைக்கும். ஆனால், தமிழ்நாட்டில் ஆட்சி செய்யும் மாநில அரசாங்கமோ தமிழக மக்களை குடிகாரர்களாக மாற்றி உயிர் பலி வாங்கி வருகிறது என்பதே உண்மை.