சென்னை: தமிழ்நாட்டில் தீபாவி பட்டாசு வெடிப்பு காரணமாக பல இடங்கள் தீ விபத்து சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், ராணிப் பேட்டையில், பட்டாசு வெடித்த  4 வயது சிறுமி பரிதாபமாக பலியானார்.

மாநிலம் முழுவதும்  பட்டாசு வெடிப்பு காரணமாக 364 தீ விபத்துக்கள் நடைபெற்றுள்ள நிலையில், சிறுமி ஒருவர் பலியாகி உள்ளார். 669 பேர் காயமடைநதுள்ளனர்.

நாடு முழுவதும்  தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் புத்தாடை அணிந்தும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடத்தில் ஈடுபட்டனர். இதனால் நாடு முழுவதும் காற்று மாசு அதிகரித்துள்ளது. அதே வேளையில் ஏராளமான தீவிபத்துக்களும் நடைபெற்றுள்ளன.

தீபாவளி அன்று மட்டும் தமிழ்நாடு முழுவதும் 364 இடங்களில் தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. தீ விபத்தால் உள்நோயாளி களாக 47 பேரும், புறநோயாளிகளாக 622 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டையில் தீபாவளி கொண்டாடத்தில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக பட்டாசு வெடித்ததில் 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.   

சென்னையில் மட்டும் 140 இடங்களில் தீபாவளி பண்டிகையை பட்டாசு வெடித்ததால் தீ விபத்தும் ஏற்பட்டது என தீயணைப்பு துறை தெரிவித்து உள்ளது.   சென்னையில், 38 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 9 பேர் மட்டும் மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 16 பேர் சிகிச்சைக்கு வந்த நிலையில் 7 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 2 பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் மாம்பாக்கம் இந்திரா நகரை சேர்ந்த ஓட்டுநர் ரமேஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடி னார். அப்போது, அவரது 4-வயது மகள் நவீஸ்கா தனது பெரியப்பா விக்னேஷனுடன் இணைந்து பட்டாசு வெடித்தது. இதில் எதிர்பாராத விதமாக ஒரு பட்டாசு அதிக சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் சிக்கிய சிறுமி பலத்த தீக்காயம் அடைந்தார். விக்னேஷின் கை விரல் துண்டானது. அவர்களது வீட்டிலும் தீ பற்றியதாக கூறப்படுகிறது.

பலத்த காயமடைந்த இருவரும் செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். விக்னேஷ் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். வெடி விபத்து சம்பவத்தில் சிறுமி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளி: விதியை மீறி பட்டாசு வெடித்ததாக சென்னையில் 581 வழக்குகள் பதிவு