சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை  7 மணிக்கு தொடங்கிய நிலையில், காலே முதலே விறுவிறுப்பான நடை பெற்று வருகிறது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகின்றது.   பல பகுதிகளில் காலை 7மணிக்கு சரியாக வாக்குப்பதிவு  தொடங்கிய நிலையில் சில இடங்களில், வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் சில காரணங்களால் சில நிமிடங்கள் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, வெயில் காலம் என்பதால் காலையிலேயே பொதுமக்கள் தங்களது வாக்கினை செலுத்த வாக்குச்சாவடி மையங்களில்  ஆவலுடன் குவிந்து வருகின்றனர்.

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 57,343,291 . இதில்  ஆண்கள்: 2,80,30,658 பேர், பெண்கள்: 2,93,04,905 பேர்,  மூன்றாம் பாலினத்தவர்: 7,728 பேர்.

இந்த தேர்தலில் சுமார் 4,000 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.  இதற்காக தமிழ்நாட்டில் 75,000-க்கும் அதிகமாகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

காலை 7 மணியிலிருந்து மாலை 6 மணிவரை வாக்களிக்கலாம். மேலும், மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வந்தவர்களும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

அதேபோன்று, https://elections.tn.gov.in/, votervazhikatti.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக வாக்குச்சாவடி விவரங்களை அறியலாம்.

இந்த தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது. இதனால் அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. மேலும், இளைய  தலைமுறையினர் மற்றும் முதன்முறை வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றுவதில் தீவிரமாக உள்ளனர். இதனால் இந்த முறை இதுவரை இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது…

[youtube-feed feed=1]