சென்னை: தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், 108 இடங்களை பெற்ற தவெக ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. தவெகவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளது. இருந்தாலும் பெரும்பான்மை இல்லாததால், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க கவர்னர் மறுத்துவருகிறார்.
கவர்னரின் அடாவடியை கண்டித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று தவெகவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா சாலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் திரு.கிரிஷ் சோடங்கர் அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திரு.கே.வீ.தங்கபாலு அவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற இந்நாள்- முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர்கள், சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், சர்க்கிள், வட்ட தலைவர்கள் மற்றும் அதன் நிர்வாகிகள், பெருநகர சென்னை மாமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் அதன் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றார்கள்.
[youtube-feed feed=1]