சென்னை: தமிழக சட்டப்பரேவை தேர்தல் இன்று மாநிலம்  முழுவதும் நடைபெறுவதையொட்டி, சென்னையில் இருந்து  1.88 லட்சம் பேர் வாக்களிக்கும் வகையில், தங்களது  சொந்த ஊர் பயணம் மேற்காண்டுள்ளதாக  போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள 234  தொகுதிகளிலும் இன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி,  பொதுமக்கள் தங்களது ஜனநாயக கடமையை செலுத்தும் வகையில்,  தமிழ்நாடு முழுவதும் இன்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால்  பணி நிமித்தமாக சென்னை உள்பட பல நகரங்களில் வசித்து வரும் ,ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

இதனால், சொந்த ஊர் செல்லும்  மக்களின் வசதிக்காக சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் சேர்த்து 10,663 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், கோயம்பேடு, மாதவரம் போன்ற போக்குவரத்து வழித்தடங்களில் இருந்து இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

நேற்று முன் தினம், வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டதுடன், கூடுதலாக 1339 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. ஒட்டு மொத்தமாக 3,431 பேருந்துகள் இயக்கப்பட்டு 1,88,705 பயணிகள் பயணம் மேற்கொண்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் தினசரி பேருந்துகளுடன் 5,662 சிறப்பு பேருந்துகள் கோயம்பேடு, கிளாம்பாக்கம் உட்பட பிரதான 4 பேருந்து முனையங்களில் இருந்து இயக்கப்பட்டன. இதில் லட்சக்கணக்கானோர் பயணம் மேற்கொண்டதால் ஜி.எஸ்.டி சாலை போக்குவரத்து நெரிசலுடன் காணப்பட்டன. போக்குவரத்து போலீசார் உதவியுடன் சரிசெய்யப்பட்டு வாகன ஓட்டிகள் இடையூறுயின்றி கடந்து சென்றனர். மேலும், பேருந்துகளில் மட்டுமல்லாது பொதுமக்கள் தங்களுடைய கார்,பைக் போன்ற வாகனங்களில் பலர் சொந்த ஊர்களுக்கு படை எடுத்து சென்றனர்.

இந்த நிலையில், செனனையில் இருந்து மட்டும் 1.88 லட்சம் பேர்  தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

[youtube-feed feed=1]