சென்னை:   தமிழ்நாட்டில் இன்று வாக்குப்பதிவு  நடைபெறுகிறது.  வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் ஆதார் உள்பட 12 ஆவணங்கள் மூலம் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்குப்பதிவு இன்று காலை 7மணிக்கு தொடங்கி மாலை 6மணி வரை நடைபெறுகிறது. வாக்குச்சாவடிகளில், வாக்காளர்களுக்கு தேவை யான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.  தமிழ்நாட்டில் சுமார் 4,000 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதேபோன்று, https://elections.tn.gov.in/, votervazhikatti.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக வாக்குச்சாவடி விவரங்களை அறியலாம். தமிழ்நாட்டில் 75,000-க்கும் அதிகமாகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

காலை 7 மணியிலிருந்து மாலை 6 மணிவரை வாக்களிக்கலாம். மேலும், மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வந்தவர்களும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

இதையொட்டி,  தேர்தல் ஆணையத்தால் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் ஒரு முக்கியமான சீட்டுதான் பூத் ஸ்லிப் ஏற்கனவே வழங்கப்பட்டு உள்ளது. இந்த பூத் சிலிப் மூலம் வாக்காளர் ஒருவர் தன் வாக்கை  எளிதாக செலுத்த முடியும். அதனால், செலுத்த வாக்குச்சாவடிக்கு செல்லும்போது வாக்காளர்கள் பூத் சிலிப்பை கையில் வைத்திருப்பது அவசியமாகும். இது,  அங்கிருக்கும் உங்களின் விவரங்களை எளிதாக தெரிந்துகொள்ள பெரிதும  உதவும்.

பூத் சிலிப்பில், உங்களின் பெயர், வயது, உங்களுடைய எபிக் எண் (EPIC Number) எனப்படும் வாக்காளர் அடையாள அட்டை எண், வாக்குச்சாவடி விவரங்கள், தேர்தல் தேதி மற்றும் முக்கியமாக வாக்காளர் பட்டியலில் உங்களின் வரிசை எண் உள்ளிட்டவை இருக்கும். இதன் காரணமாக எளிதாக   தங்களது வாக்கினை வாக்காளர் செலுத்த முடியும்.

அதே வேளையில் வாக்களிக்க தேவையான அடையாள அட்டையான வாக்காளர் அடையாள  அட்டை இல்லாதவர்களும்  மாற்று ஆவணங்களை காட்டி வாக்களிக்க முடியும். அதனால்,   வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றால் கவலை வேண்டாம்.

அதன்படி, 12 ஆவணங்களை தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது. அதில் ஒன்றை காண்பித்து வாக்கு செலுத்த முடியும்.

ஆதார் அட்டை

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் (MNREGA) பணி அடையாள அட்டை

புகைப்படத்துடன் இருக்கும் வங்கி/தபால் அலுவலக பாஸ்புக் (passbook)

தொழிலாளர் அமைச்சகத்துடைய திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை

ஓட்டுநர் உரிமம்

பான் அட்டை (PAN)

தேசிய மக்கள் தொகை பதிவின் கீழ் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை

இந்திய பாஸ்போர்ட்

புகைப்படத்துடன் இருக்கும் ஓய்வூதிய ஆவணம்

புகைப்படத்துடன் இருக்கும் அரசு பணியாளர் அடையாள அட்டைகள்

எம்.பி/எம்எல்ஏ/எம்எல்சிக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை

இந்திய அரசின் சமூக நீதி அமைச்சகத்தால் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை உள்ளிட்டவை

வாக்காளர்கள் ஒவ்வொருவரும் தங்களது கடமையாய செய்வது அவசியம்…

இன்று வாக்குப்பதிவு: யாருக்கு வாக்களிக்க வேண்டும் என சிந்தித்து வாக்களியுங்கள்…

[youtube-feed feed=1]