தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை சற்றே சிந்தித்து ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும்.
அடுத்த 5 ஆண்டுகாலம் நம்மை ஆளப்போகிறவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் என்பதால், வாக்களிப்பதிலும், யாருக்கு வாக்களிக்கப் போகிறோம் என்பதிலும் ஒவ்வொரும் கவனம் செலுத்துவது சாலச்சிறந்தது.

தமிழ்நாட்டின் தற்போதைய சட்டமன்றத்தின் ஆயுட்காலம் மே 10ந்தேதி முடிவடைகிறது. அதற்குள் புதிய சட்டமன்றம் தேர்வு செய்யப்பட வேண்டும். அதற்கான ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15ந்தேதி அன்று மாலை அறிவித்துள்ளது. அதன்படி, இன்று (ஏப்ரல் 23ம் தேதி) 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறார்.
தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த (2026 சட்டமன்ற) தேர்தலில் 3,579 ஆண்கள், 443 பெண்கள், ஒரு திருநங்கை என 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் சுமார் 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அதில், ஆண் வாக்காளர்கள் 2,77,38,925 பேரும், பெண் வாக்காளர்கள் 2,89,69,838 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 7,617 பேரும் உள்ளனர். முதல்முறை வாக்காளர்கள் 12.51 லட்சம் பேர் உள்ளனர்.
மாநிலம் முழுவதும் வாக்காளர்கள் எளிதாக வாக்களிக்கும் வகையில், 75,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. அதாவது மாநிலம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நகர்ப்புறங்களில் 30,967 ஓட்டுச்சாவடிகளும், கிராமப்புறங்களில் 44,065 ஓட்டுச்சாவடிகளும் உள்ளன. 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 75 ஆயிரம் விவிபாட் (VVPAT) இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
இந்த தேர்தலில் ஆளும் கட்சியான தி.மு.க. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திமுக மேலும் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதுபோல, அதிமுக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பிலும் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிடப்பட்டுள்ளது. இந்த திராவிட கட்சிகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில், தவெக தலைவர் விஜயும் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையில், நாம் தமிழர் கட்சி எப்போதும் போல தனித்து களமிறங்குவதுடன் அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் 4 முனை போட்டி நிலவுகிறது.
இந்த பரபரப்பான சூழலில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 5 ஆண்டுகாலம் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை ஒரு அரசியல் கட்சியின் கைகளில் ஒப்படைக்கும் முன்பு ஒவ்வொருவரும் சற்றே சிந்தித்து வாக்களிக்க வேண்டும். குறிப்பாக இளம் தலைமுறையினரான முதன்முறை வாக்காளர்கள் நன்றாக சிந்தித்து, நமது மாநிலத்தின் எதிர்காலம், நாட்டின் எதிர்காலம், பொருளாதாரம் மேம்பாடு உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து நன்றாக ஆராய்ந்து வாக்களிக்க வேண்டியது கடமையாகும்.
வாக்காளர் ஒருவர் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது ஒரு தனிப்பட்ட முடிவு, என்றாலும், அடுத்த 5 ஆண்டுகாலம் நம்மை ஆளப்போகிறவரின், நேர்மை, வேட்பாளரின் கடந்த கால செயல்பாடுகள், கொள்கைகள், கல்வித்தகுதி, குற்றப் பின்னணி, ஊழல் செய்யாதவரா, நமது பகுதி மற்றும் தொகுதி மேம்பாட்டிற்கான தொலைநோக்கு பார்வை ஆகியவற்றின் அடிப்படையில் வாக்களிப்பது சிறந்தது.
உங்கள் பகுதியின் முன்னேற்றம் மற்றும் சமூக நலனை கருத்தில் கொண்டு, வாக்குறுதிகளை நிறைவேற்றும் திறனுடையவருக்கு வாக்களியுங்கள். இலவசங்களுக்கு ஆசைப்பட்டு தங்களது வாக்கினை விற்பனை செய்யாதீர்கள்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பின்புலம் குறித்து தேர்தல் ஆணையமே தனது இணையதளத்தில் பல்வேறு தகவல்களை பதிவிட்டு, வாக்காளர்கள் அறிந்துகொள்ள வசதிகளை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, தேர்தல் ஆணையத்தின் ECINET செயலியில் ‘Know Your Candidate’ என்பதை க்ளிக் செய்து, உங்களின் தொகுதியை தேர்ந்தெடுத்தால் அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த முழு விவரங்களையும் அறிந்துகொள்ளலாம். வேட்பாளர்களின் முகவரி, சொத்துப் பின்னணி, குற்ற பின்னணி, வழக்குகளின் தற்போதைய நிலை குறித்த முழு தகவல்களையும் அறிந்துகொள்ளலாம்.
மேலும், வாக்குச்சாவடியிலும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் சின்னங்கள் குறித்த விவரங்கள் பெரியளவில் வைக்கப்பட்டிருக்கும்.
அதனால், உங்களின் ஒரு வாக்கு, உங்கள் பகுதியின் 5 ஆண்டு கால வளர்ச்சியை நோக்கி இருக்க வேண்டும். வாக்களிப்பது ஒரு உரிமை மட்டுமல்ல, அது சமூகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியப் பொறுப்புமாகும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு உங்கள் பகுதியை ஆளப்போகும் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கிறது என்பதை நினைவில் வைத்து சிந்தித்து வாக்களியுங்கள்…
அனைவரும் வாக்களிக்க வேண்டும்.. 100 சதவிகித வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என ஒவ்வொருவரும் நினைத்து, தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள்…
[youtube-feed feed=1]