டில்லி,

மித்ஷா மகன் மீதான முறைகேடுகளை திசைதிருப்பவே பாரதிய ஜனதாவினரால் தாஜ்மஹால் குறித்தை சர்ச்சையை கிளப்பி உள்ளனர் என்று டில்லி ஜவஹர்லால் பல்கலைக்கழக மாணவர் சங்க முன்னாள் தலைவர் கன்னையாகுமார் கூறி உள்ளார்.

பாரதியஜதான தேசிய தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவின் வருமானம் ஒருசில ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து எதிர்க்கட்சி கள் சரமாரியாக குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்க தலைவர் கன்னையாகுமார் பஞ்சாபுக்கு வந்திருந்தார். அப்போது  செய்தியாளர்களிடம்  அவர் கூறியதாவது:

குஜராத்தில் நடைபெற்று வரும் ஒவ்வொரு தேர்தலிலும் பா.ஜ.க.வின் வாக்கு வங்கி தொடர்ந்து சரிந்து வருகிறது. வரும் காலங்களில் நான் அரசியலில் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளது. ஆனால், நான் எந்த அரசியல் கட்சிக்கும் ஏஜெண்ட் இல்லை.

ஜி.எஸ்.டி வரி மற்றும் பண மதிப்பிழப்பு போன்ற அரசின் நடவடிக்கைகள், பெரிய வியாபாரிகளால் சிறிய வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவின் வருமானம் பல மடங்கு உயர்ந்து உள்ளது. இது குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த பிரச்சினையை திசை திருப்பவே, தாஜ்மஹால் பிரச்சினையை பாஜ கிளப்பி விட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.