சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, காமெடி நடிகர் கருணாஸ் இன்று முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டிலும் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ந்தேதி நடைபெற உள்ள நிலையில்,  வேட்புமனுத்தாக்கல்  மார்ச் 20ந்தேதி முதல் தொடங்கி உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக உள்பட கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ள நிலையில், திமுகவுக்கு மேலும் சில கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக, காமெடி நடிகர் கருணாஸ் தனது ரசிகர்களை கொண்டு நடத்தி வரும், முக்குலத்தோர் புலிப்படை கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக  நடிகர்  கருணாஸ்  இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  நேரில் சந்தித்து திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

காமெடி நடிகர் கருணாஸ் மறைந்த ஜெ.முதல்வராக இருந்தபோது, அதிமுக ஆதரவில் வெற்றிபெற்று எம்எல்ஏவாக இருந்தார். அவரது மறைவுக்கு பிறகு சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தவர், அப்போது நடைபெற்ற கூவத்தூர் சம்பவத்தின்போது, அங்கு தங்கியிருந்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு நடிகைகளை சப்ளை செய்ததாக குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.