மதுரை

மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜூன் 5 வரை நீதிமன்றக் காவலை நீட்டித்துள்ளது.’

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தேனி மாவட்டம் பழனி செட்டிபட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்தபோது 2.5 கிலோ கஞ்சா வைத்திருந்thaaka  அவர் உட்பட 4 பேர் மீது பழனி செட்டிபட்டி காவல் நிலையத்தில் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமலசெல்வன் இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை 2 நாட்கள் போலிஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு பிறப்பித்தார்.  இரண்டு நாட்கள் சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் விசாரித்தனர்.  இன்று காவல் விசாரணை நிறைவுற்றதை அடுத்து சவுக்கு சங்கர்
மதுரை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

சவுக்கு சங்கர் விசாரணையின் போது காவல்துறையினர் என்னை துன்புறுத்தவில்லை, உணவு,  தங்குமிடம் வழங்கினார்கள்.  வழக்கறிஞர்கள் என்னை நேரில் சந்தித்தனர் என நீதிமன்ற கேள்விகளுக்கு பதிலளித்தார்.  கஞ்சா வழக்கில் 2 ஆம் முறையாக ஜீன் 5 ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவு பிறப்பித்தார்.