சென்னை

சென்னை உயர்நீதிமன்ற்த்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர் மகாதேவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி பணி ஓய்வு பெற்றார்.பிறகு மூத்த நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ராஜா ஆகியோர் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்து பணி ஓய்வு பெற்றனர்.

கடந்த 2023 ஏப்ரல் 19 ஆம் தேதி உச்சநீதிமன்ற கொலீஜியம் மும்பை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.வி. கங்காபூர்வாலாவை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கும், ஜனாதிபதிக்கும் பரிந்துரை செய்ததை ஏற்ற ஜனாதிபதி, கங்காபூர்வாலாவை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்க உத்தரவிட்டார்.

கடந்த ஆண்டு மே 28-ம் தேதி தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலா பதவி எற்றுக் கொண்டார். ஆளுநர் ஆர்.என். ரவி பதவி  அவருக்கு பிரமாணம் செய்து வைத்தார். கங்காபூர்வாலா சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஓராண்டு பணியாற்றிய 23-ம் தேதி \பணி ஓய்வு பெறுகிறார்.

சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவனை நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். எஸ்.வி. கங்காபூர்வாலா நாளை ஓய்வு பெற உள்ள நிலையில் மூத்த நீதிபதியாக உள்ள மகாதேவனை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.