புதுடெல்லி:
செந்தில் பாலாஜி மேல்முறையீடு வழக்கு ஒத்திவைப்பு வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில்பாலாஜிமீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது பணம் வாங்கிக் கொண்டு அரசு வேலை போட்டுத்தருவதாக ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டதாகவும், சட்ட விரோத பண பரிவர்த்தனை செய்ததாகவும் வழக்குகள் உள்ளன. இந்த வழக்கில், அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி அவரை, கடந்த ஜூன் 13ஆம் தேதி கைது செய்தது.. இதையடுத்து அவர் நெஞ்சு வலிப்பதாக கூறி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்த நிலையில் அவரை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த நிலையில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். இதை தொடர்ந்து மூன்றாவது நீதிபதியான கார்த்திகேயன் செந்தில் பாலாஜியை காவல் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.

இதன் காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு அவரது மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தார். அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே கேவியட் தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து காவிரி மருத்துவமனையில் இருந்து செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலாவின் மேல்முறையீடு மனுக்கள் மீதான வாதங்கள் நிறைவு பெற்றது.

இதையடுத்து அமலாக்கத்துறை தரப்பில் வாதங்களை முன்வைக்க அனுமதித்த உச்சநீதிமன்றம், விசாரணையை நாளை தள்ளி வைத்தது.