டில்லி,

நாடு முழுவதும்  பட்டாசுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இந்திய விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர் என்று மத்திய சுற்றுசூழல் துறை அமைச்சர்  ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பட்டாசுக்குத் தடை விதிக்கக்கோரி பல்வேறு தரப்பினர் உச்சநீதி மன்றத்தில்  பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளனர்.  கொல்கத்தாவைச் சேர்ந்த தத்தா என்பவரும்  உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காற்று மாசுவை கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்க வேண்டும்  அவரின் பொதுநல மனுவை உச்சநீதிமன்றம்  விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

இந்த வழக்கில் எதிர்தரப்பாக சேர்க்கப்பட்டுள்ள மத்திய அரசு மற்றும் பட்டாசு விற்பனையாளர் சங்கங்கள் இரண்டு வாரத்திற்குள் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் பட்டாசு தயாரிக்கும் மாவட்டமான சிவகாசியில், பட்டாசு ஆலை அதிபர்கள், தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 24 நாட்கள் நடைபெற்ற போராட்டத்தை தொடர்ந்து தமிழக அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தியது தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில், இதுகுறித்து, மத்திய சுற்றுசூழல் துறை அமைச்சர்  ஹர்ஷவர்தன் கூறும்போது,  சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இந்திய விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர் என்று  தெரிவித்துள்ளார்.