சென்னை:  தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சசர் கூறியதாக  தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோ தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் வரும் 16ந்தேதி முதல் உயர்நிலை வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதையொட்டி தமிழகத்திலும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. பல தனியார் பள்ளிகள், கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதால், பள்ளிகளை திறக்க வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், செய்தியளார்களை  சந்தித்த தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோ கூறியதாவது,  தமிழகத்தில் விரைவில் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கோரி இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தவர், ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு முழுமையான அளவு பாடங்களை நடத்த முடியவில்லை  என்பதை விளக்கியதாகவும் தெரிவித்துடன்,, அமைச்சர், விரைவில்,  9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்ததாக கூறினார்.

மேலும் கட்டண நிர்ணயம் செய்வதற்கு கால அவகாசம் கேட்டிருப்பதாகவும்,. டிசி இல்லாமல் எந்த வகையான பள்ளியிலும் மாணவர் சேர்க்கை நடத்த கூடாது என்றும் கூறிய இளங்கோ,  கட்டணம் செலுத்தாமல் படித்துவிட்டு வேறு பள்ளியில் சேரும் மாணவர்களால் நிர்வாகம் பாதிக்கப்படுகிறது என்றும் குற்றம் சாட்டினார்.