சென்னை: காவிரியின் குறுக்கே கர்நாடகாவில் மேகதாது அணை கட்டப்படக்கூடாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மேகதாது அணை குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.  தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை  கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, மதிமுக, விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட 13 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த அனைத்து கட்சி கூட்ட ஆலோசனையில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை பிரதிபலிக்கும் வகையில் அனைத்துக் கட்சி தீர்மானத்தை டெல்லி சென்று மத்திய அரசிடம் வழங்க முடிவு செய்துள்ளனர். மேலும், மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்து கட்சிகளுக்கும் ஆதரவு அளித்துள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும்  அதிமுக சார்பில் பங்கேற்றவர்களில் ஒருவரான அமைச்சர் ஜெயக்குமார், கர்நாடகாவில் மேகதாது அணை எந்த சூழலிலும் கட்டப்படக்கூடாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு என்றும் இந்த கருத்தினை தெரிவித்திருக்கிறோம். காவிரி நதிநீர் பிரச்சனைக்கு அனைத்து ரீதியிலும் சட்டப்போராட்டம் நடத்தி, 72 மணிநேரம் உண்ணாவிரதம் இருந்தது மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்றும் உரிமையை நிலைநாட்டிய இயக்கம் அதிமுக.,

இவ்வாறு அவர் கூறினார்.