சேலம்: நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவுக்கு இலவசமாக 45கிலோ சந்தனக்கட்டைகள் வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டு உள்ளது.

நாகூர் தர்காவை சேர்ந்த இஸ்லாமியர்கள், தமிழக முதல்வரை சந்தித்து நாகூர் தர்காவில் நடைபெறும் சந்தனக்கூடு விழாவுக்கு, சந்தனக் கட்டைகள் கேட்டு, மனு கொடுத்தனர். இந்த மனுவை பரிசீலனை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் 45  கிலோ சந்தனக் கட்டைகளை இலவசமாக அனுப்புமாறு உத்தரவிட்டார்.

இதற்கான அரசாணையை  நாகூர் தர்கா நிர்வாகி அலாவுதீனிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின்போது, தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு உள்பட நாகூர் தர்கா நிர்வாகிகள் உடனிருந்தனர்.