சென்னை: மத்திய பாஜக அரசின் மறைமுக அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டோம் என கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்  தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு புதிதாக ஆட்சி அமைத்துள்ளது.  இதையடுத்து மத்தியஅரசிடம் இருந்து பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணைய வலியுறுத்தி தலைமைச்செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இது பேசும்பொருளாக மாறியது. மேலும், இந்த விஷயத்தில், கடந்த கால அரசுகள் போல, .வெ.க அரசும் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை எதிர்க்குமா? இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருக்குமா? என்ற கேள்விகள் எழுந்திருந்தன

இந்த நிலையில், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்சென்னை நுங்கம்பாக்கத்தில்  செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்வி நிதியை மத்திய அரசு வழங்காதது துயரமானது. அந்த நிதி எங்களுக்கான நிதி கிடையாது, அதிகாரிகளுக்கான நிதி கிடையாது. அந்த நிதி மாணவர்களுக்கான நிதி. எந்த காரணம் கொண்டு அதை தடை செய்வது துயரமானது, அதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அதே போல், எந்தவித மறைமுக அழுத்தத்திற்கும் நான் அடிபணிய மாட்டோம். மண்ணுரிமையும் பெண்ணுரிமையும் தவெகவி அடிப்படை உரிமையாக இருப்பதை போலவே இருமொழிக் கொள்கை என்பது எங்கள் கட்சியின் பிரகடனப்படுத்தப்பட்ட கொள்கை. அதில் மாற்று கருத்தும் இல்லை. அதனால் பிஎம்ஸ்ரீ திட்டம் குறித்த எந்த அழுத்தங்களுக்கும் நாங்கள் அடிபணிய மாட்டோம். எடுத்த கொள்கையில் உறுதியாக இருப்போம் என்றார்.

[youtube-feed feed=1]