சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 பேரை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.  இதற்கு மத்தியஅரசு ஒப்புதல் வழங்கியதும், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக 9 நீதித்துறை அதிகாரிகளையும், 10 வழக்கறிஞர்களையும் உச்ச நீதிமன்ற கொலீஜியம் அங்கீகரித்தது. தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான இந்தக் கொலீஜியம், மே 18 அன்று நடைபெற்ற கூட்டத்தில், இவர்களை நீதிபதிகளாக நியமிப்பதற்கான பெயர்களுக்கு ஒப்புதல் அளித்தது.

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகள் பணியிங்கள்  75 நீதிபதிகள் . தற்போதைய நிலையில் உயர்நீதிமன்றத்தில்  23 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் வழக்குகள் தேக்க மடைகின்றன.

இந்த காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில், கடந்த 2025 ஆம் ஆண்டு மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் அந்தஸ்தில் உள்ள சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் எஸ்.அல்லி மற்றும் மாவட்ட நீதிபதிகள் முருகன், சுமதி, திருமகள் சந்திரசேகர், தர்மலிங்கம் லிங்கேஸ்வரன், கார்த்திகேயன் பாலதாண்டாயுதம், சண்முகம் கார்த்திகேயன், பாலுச்சாமி முருகேசன், குணசேகரன் ஆகிய 9 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அத்துடன்,   வழக்கறிஞர்கள் என். ரமேஷ், ஜி.கே.முத்துக்குமார், ராஜேஷ் விவேகானந்தன், சங்கரநாராயணன் ரவிக்குமார், நாகராஜன் திலீப்குமார், இ.மனோகரன், கிருஷ்ணசாமி கோவிந்தராஜன், ரஜினிஷ் பதியில், கே.அப்பாதுரை, ஆர்.அனிதா ஆகிய 10 பேரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டு இருந்தன.

இதுகுறித்து உச்சநீதிமன்றம் ஆய்வு செய்து வந்தது. இதைத்தொடர்ந்து,   உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் கூட்டம் மே 20ந்தேதி  நடைபெற்றது. இதில், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதிகளாக பரிந்துரைக்கப்பட்ட 19 பேரின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்தக்கட்டமாக, இவர்களின் நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், குடியரசு தலைவர் புதிய நீதிபதிகள் நியமனம் குறித்த உத்தரவை பிறப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 பரிந்துரைக்கப்பட்ட 19  பேர் பட்டியல்

  1. பி. முருகன்
  2. எம்.டி. சுமதி
  3. எஸ். அல்லி
  4. திருமகள் சந்திரசேகர்
  5. தர்மலிங்கம் லிங்கேஸ்வரன்
  6. கார்த்திகேயன் பாலதண்டாயுதம்
  7. நடராஜன் ரமேஷ்
  8. ஜி.கே. முத்துக்குமார்
  9. ராமகிருஷ்ணன் ராஜேஷ் விவேகானந்தன்
  10. சங்கரநாராயணன் ரவிக்குமார்
  11. நாகராஜன் திலீப்குமார்
  12. எல்லப்பன் மனோகரன்
  13. கிருஷ்ணசுவாமி கோவிந்தராஜன்
  14. ரஜ்னிஷ் பதியில்
  15. அப்பாதுரை (எ) கந்தவேல் அப்பாதுரை
  16. ராமசாமி அனிதா
  17. சண்முகம் கார்த்திகேயன்
  18. பாலுச்சாமி முருகேசன்
  19. என். குணசேகரன்‘
[youtube-feed feed=1]