டில்லி

ச்சநீதிமன்றம் மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் தலையிட மறுப்பு தெரிவித்துள்ளது..

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காகக் கடந்த 2019-ல் அடிக்கல் நாட்டிய பிறகும் கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.   இந்த விவகாரம் தமிழக சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்தது.  கிட்டத்தட்ட திமுக அபார வெற்றி பெற்றதற்கு இதுவும் ஒரு காரணம் என்றே கூறலாம்

உச்சநீதிமன்றத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இன்று அந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் முன்பு விசாரணைக்கு வந்தது.

உச்சநீதிமன்றம் மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என்றும், இந்த வழக்கில் எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க இயலாது என்றும் நீதிபதி தெரிவித்தார். மனுதாரர் நிர்வாக ரீதியில் எய்ம்ஸ் விவகாரத்தை அணுகவேண்டும் என்று கூறி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார்.