சென்னை: மணல் குவாரி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்ததுடன், தமிழ்நாடு அரசையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
தமிழக அரசின் மனு விநோதமாக உள்ளது என்று கூறியுள்ளதுன், சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான வழக்கில் ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறியுள்ளது. அதன்படி, அமலாக்கத்துறை சம்மனுக்கு திருச்சி, தஞ்சை, கரூர், அரியலூர், வேலூர் ஆட்சியர்கள் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மணல்குவாரிகளில், அரசு அனுமதித்த அளவை விட அதிகமாக மணல் எடுத்து விற்பனை செய்ததாகவும், மணல் குவாரிகள் மூலம் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகவும் எழுந்த புகாரை தொடர்ந்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் தமிழகத்தின் பல இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் பல முக்கிய ஆதாரங்கள் சிக்கியமாக தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை, 10 மாவட்ட ஆட்சியர்கள், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர், ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பியது.
இந்த சம்மனை எதிர்த்து 5 மாவட்ட ஆட்சியர்கள் நீர்வளத்துறை செயலாளர். பொதுப்பணித்துறை செய்லாளர் ஆகியோர் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சம்மனுக்கு இடைக்கால தடை விதித்தது,
‘சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செயய்ப்பட்டது. இந்த மனுவை விவாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் தமிழக அரசு ரிட் மனு தாக்கல் செய்ய வேண்டுமா? அல்லது அமலாக்கத்துறை விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பினர்.
இந்த வழக்கு நேற்று (பிப்ரவரி 27ந்தேதி) மீண்டும் விவாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பேலா எம்.திரிவேதி, நீதிபதி பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு, 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
மேலும், தமிழக அரசு மற்றும் அதிகாரிகள் தாக்கல் செய்த மனு விசித்திரமானது மற்றும் அசாதாரணமானது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின்படி, வேலூர், திருச்சி, கரூர், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் தற்போது அமலாக்கத்துறையின் சம்மனுக்கு பதில் அளிக்க வேண்டிய நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மணல் குவாரி முறைகேடு: தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் – அரசு வழக்கு…
மணல் குவாரி மோசடி: ஒப்பந்ததாரர்களின் ரூ.130 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை
மணல் குவாரி விவகாரம்: கலெக்டர்கள் மீதான சம்மன் வழக்கில் உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி…