சென்னை: தமிழ்நாட்டின் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்திய நிலையில்,   மணல் குவாரி ஒப்பந்ததாரர்களின் சுமார் ரூ.130 கோடி மதிப்பிலான சொத்துகளை  முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதத்தில்  தமிழ்நாட்டின்  பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும்  மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை தொடர் ரெய்டு நடத்தியது. மேலும், மணல் குவாரி ஒப்பந்ததாரர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தியது. திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடந்த இந்த சோதனையில், சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக பல்வேறு முக்கிய ஆவணங்கள், கணக்கில் வராத பணம் சிக்கியதாக கூறப்பட்டது. இந்த சோதனைகளின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதைத்தொடர்ந்து,  அமலாக்கத்துறை அலுவலகத்தில், தமிழக நீர்வளத்துறையின் முதன்மை பொறியாளர் முத்தையா விசாரணைக்கு ஆஜரானார்.  அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள், தமிழகத்தில் எத்தனை குவாரிகளுக்கு மணல் அள்ளுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை இந்த விசாரணையின்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்டதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக சம்மன் அனுப்பியது. இது சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு, அமலாக்கத்துறை சம்மனுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  மணல்குவாரிகளில் நடைபெற்ற சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், தற்போது அதுதொடர்பான அறிக்கை வெளியிட்டு உள்ளது அதன்படி,  இந்த சோதனைகளின் அடிப்படையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும்; அதன் அடிப்படையில் மணல் குவாரிகள் தொடர்பாக பன்னீர்செல்வம் கரிகாலன் மற்றும் பிறருக்குச் சொந்தமான 35 வங்கிகளில் இருந்து ரூ. 2 கோடியே 25 லட்சம் தொடர்பான பணம் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளது.  அதேபோல் அசையும் சொத்துகள் மற்றும் அசையாச் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து சமீபத்தில் நடந்த சோதனையின் அடிப்படையில் தோராயமாக ரூ. 130 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு விவகாரங்களில் முறைகேடு நடைபெற்றதுள்ளதால், சட்டவிரோத பணப்பரிமாற்றச் சட்டத்தின் கீழ் இந்த சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ”சட்டவிரோத மணல் குவாரிகளில் பயன்படுத்தப்பட்ட 209 மணல் அள்ளும் கருவிகள் உட்பட ஏறத்தாழ ரூ.128.34 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகள் உட்பட சுமார் ரூ.130.60 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்க இயக்குநரகம் தற்காலிக மாகப் பறிமுதல் செய்துள்ளது.

கூடுதலாக, சட்டவிரோத மணல் குவாரி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்களான சண்முகம் ராமச்சந்திரன், கருப்பையா ரத்தினம், பன்னீர்செல்வம் கரிகாலன் உள்ளிட்டவர்களின் ரூ.2.25 கோடி பணம் முதலீடு செய்யப்பட்டிருப்பது பணமோசடி தடுப்புச் சட்டவிதிகளின்படி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனிம வளக்கொள்ளை: மணல் ஒப்பந்ததாரரான எஸ்.ராமச்சந்திரன் வீடு உள்பட பல இடங்களில் 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை.

மணல் குவாரி முறைகேடு: தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் – அரசு வழக்கு…