சென்னை:  மணல்குவாரி முறைகேடு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக் கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அமலாக்கத்துறை தொடர் சோதனை மேற்கொண்டது. குறிப்பாக ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், மணல் குவாரிகள் உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது. அதில்,  தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக  பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு தொடர்பாக தமிழகம் முழுவதும் கடந்த செம்பம்பர் மாதம் 20 க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்க துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.


திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள் மீதான பல்வேறு குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து, அவர்கள் தொடர்புடைய மணல் குவாரி அதிபர்கள் , தற்போதைய சில அதிகாரிகள் மற்றும் மாஜி அதிகாரிகள். மணல் குவாரி காண்டிராக்டர் களின் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது. முக்கிய ஆதாரங்கள் திரட்ட இந்த சோதனை நடப்பதாக கூறப்பட்டது.

சென்னையில் மணல் குவாரி காண்டிராக்டர் ராமச்சந்திரனுக்கு சொந்தமாக இடங்கள் உள்ள அண்ணா நகர், நுங்கம் பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அமலாக்க துறையினர் அதிரடி சோதனை சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர். அதுபோல, புதுக்கோட்டையில் தொழிலதிபர் மற்றும் மணல் குவாரி நடத்தி வரும் ராமச்சந்திரன் சொந்தமான உள்ள அவருடைய அலுவலகம் மற்றும் அவர் தொடர்புடைய ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை பறிமுதல் செய்தனர். மேலும், திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம் ஹனிபா நகரில் பிரபல தொழிலதிபர் ரத்தினம் அவர்களின் மைத்துனர் கோவிந்தன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

திருச்சி திருவானைக்காவல் அருகே கொள்ளிடம் மணல் குவாரியில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நாமக்கல் நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள மணல் சேமிப்பு கிடங்கில் அமலாக்கத்துறை அதிகாரி கள் சோதனை நடத்தினர். வேலூர் வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா அருகே கந்தனேரி பாலாற்றில் செயல்படும் மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கரூர் கரூரில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான நன்னியூர், புதூர், நெரூரில் உள்ள மணல் குவாரிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதேபோல், தஞ்சாவூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் உள்ள மணல் குவாரிகளுக்கே நேரடியாக சென்று சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது  மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் வீடுகளில் இருந்து கணக்கில் வராத பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரூ.12.82 கோடி ரொக்க பணம், ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள 1024 கிராம் தங்கம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்தது.

இதைத்தொடர்ந்து மேல்நடவடிக்கையாக,  10 மாவட்ட ஆட்சியர்கள், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் திலகம் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராக கூறி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது.

இந்த சம்மனை தொடர்ந்து நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் சில முக்கிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார். இந்த பின்னணியில் மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழகஅரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் கனிம வள சட்டம் சேர்க்கப்படாத நிலையில், மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத் துறைக்கு அதிகாரவரம்பு இல்லை என்றும், மாநில அரசு அதிகாரிகளை துன்புறுத்தும் நோக்கிலும், அரசு நிர்வாகத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கிலும் அமலாக்கத் துறை செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கதிர் ஆனந்தைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்