சென்னை: அமைச்சர் பொன்முடி நவம்பர் 30-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்  அனுப்பி உள்ளது. நேற்று ஏற்கனவே சோதனைகள் நடத்தப்பட்டது தொடர்பான வழக்கில் திமுக எம்.பி. கதிர் ஆனந்த் விசாரணைக்கு வர சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், தற்போது அமைச்சர் பொன்முடிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சட்ட விரோத பணப்பரிவர்த்தனை புகார் தொடர்பாக வரும் 30 ம் தேதி நேரில் ஆஜர் ஆகி விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர்.

அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் கடந்த ஜூலை மாதம் அதிரடி சோதனைகளை அமலாக்கத்துறை நடத்தியது. இந்த சோதனையின்போது  கிடைக்கப்பட்ட ஆவணங்கள் குறித்து அமலாக்கத்துறை ஜூலை 18ந்தேதி அமலாக்கத்துறை விளக்கம் தெரிவித்து ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டது.

அதில்,  இந்த சோதனையில் பல்வேறு குற்ற ஆவணங்கள், ரூ. 81.7 லட்சம், வெளிநாட்டு நாணயம் (பிரிட்டிஷ் பவுண்டுகள்) தோராயமாக. ரூ. 13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ரூ.41.9 கோடி நிலையான வைப்பு நிதி முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறையினர் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், சட்ட விரோத பணப்பரிவர்த்தனை புகார் தொடர்பாக வரும் 30 ம் தேதி நேரில் ஆஜர் ஆகி விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்த போது அமைச்சர் பொன்முடியும் அமைச்சராக பணியாற்றினார். அப்போது, இவரும் இவரது மகன் கவுதம சிகாமணியும் அவர்களின் உறவினர்களுடன் சேர்ந்து செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறி அப்போது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து அமைச்சர் பொன்முடி, கடந்த ஆண்டுதான் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுப்பட்டார்.

இவர், சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக அவர் மீது தொடங்கப்பட்ட வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக  உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி வீட்டிலும் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறையினர்  ஜூலை மாதம்  சோதனை நடத்தினர். சுமார் 13 பணி நேரம் இந்த சோதனை நடைப்பெற்றது. பொன்முடிக்கு சொந்தமாக சென்னை மற்றும் விழுப்புரத்தில் உள்ள வீடுகளில் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். விக்கிரவாண்டி சாலையில் உள்ள சூர்யா அறக்கட்டளைக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். பொன்முடியின் மகனும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணியின் வீட்டிலும் சோதனை நடந்தது.

சுமார் 13 மணிநேரம்  நடைபெற்ற  சோதனைகளைத் தொடர்ந்து, அவர் சைதாப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திலிருந்து சாஸ்திரி பவனுக்கு விசாரணைக்காக  அழைத்துச் செல்லப்பட்டார்.. பொன்முடியின் காரிலேயே அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர். இரவு முழுவதும் அமலாக்கத்துறையினர் பொன்முடியை விசாரணை நடத்தினர். அதிகாலை 3 மணி அளவில் அவரை விசாரணையிலிருந்து விடுவித்து மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டனர். இதையடுத்து அவர் இன்று ஆஜரானார்.

சில மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அமலாக்கத்துறையினர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் இருந்து பரிமுதல் செய்த சொத்து மற்றும் ஆவணங்களின் விவரங்களை மொத்தமாக ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தனர்.

இதைத்தொடர்ந்து, தற்போது விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

திமுக எம்.பி கதிர் ஆனந்துக்கு அமலாக்கத்துறை சம்மன்….. அதிர்ச்சியில் அமைச்சர் துரைமுருகன்…