சென்னை; தமிழ்நாட்டில் பயன்பாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் 28 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ம் தேதி முதல் ட்டணம் உயர்த்தப்படுகிறது. இது வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள், 2008, விதி 5ன்படி, பயனர் கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று 78 சுங்கச்சாவடிகளுக்கு சுங்க கட்டண உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, ஐந்து முதல் 10 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்திக் கொள்ள, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் அமல்படுத்தப்படும்.
அதன்படி ஏப்ரல் 1 முதல் பெரும்பாலான சுங்கச்சாவடிகளிலும், செப்டம்பர் 1 முதல் மீதமுள்ள சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் ஆண்டுக்கு ஒரு முறை உயர்த்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 5 முதல் 10 சதவிகிதம் வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.
அதன்படி, தமிழ்நாட்டில் மட்டும் 78 தேசிய சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் 28 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ந்தேதி முதல் சுங்கக் கட்டணம் மேலும் உயர்த்தப்பட உள்ளது.
ஏற்கனவே பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் கூடும் என அச்சத்தில் உள்ள பொதுமக்களுக்கு சுங்கக்கட்டண உயர்வு மேலும் பேரிடியாக அமையும்.