டாஸ்மாக் செல்வோருக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்படும் – அமைச்சர்

Must read

சென்னை: 
டாஸ்மாக் செல்வோருக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்படும் என்று  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாற்றில் நடைபெற்று வரும் மாபெரும் தடுப்பூசி முகாம் மற்றும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், பொன்முடி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், பொது இடங்களுக்கு வருவோருக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும், டாஸ்மாக் செல்வோருக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்படும் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் இன்று 12-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் -50,000க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.  தென் ஆப்பிரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு விமான நிலையத்தில் உள்ள மருத்துவக்குழு பரிசோதனை செய்வதாகவும் அவர்களில் அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

More articles

Latest article