மழையால் பாடத்திட்டத்தைக் குறைக்க வாய்ப்பில்லை  -அமைச்சர் அன்பில் மகேஷ்

Must read

சென்னை: 
ழையால் பாடத்திட்டத்தைக் குறைக்க வாய்ப்பில்லை என்று  பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நாளை பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால், மாணவர்களின் பாடத்திட்டத்தைக் குறைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்த கேள்விக்குப் பதில் அளித்த  அமைச்சர் அன்பில் மகேஷ், மழையால் பாடத்திட்டத்தைக் குறைக்க வாய்ப்பில்லை  என்று கூறினார்.  இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தாலும் பாடத்திட்டத்தைக் குறைக்க அவசியம் இல்லை என்றும், பள்ளிகள் திறக்கப்பட்ட பின் கூடுதல் வகுப்புகள் வைத்து பாடங்களை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article