அகமதாபாத்: குஜராத்தில் மருந்து தொழிற்சாலையில் ரூ.1000 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே  போதைபொருள் கடத்தல் கேந்திரமாக குஜராத்தில் உள்ள அதானி துறைமுகம் மாறி வரும் நிலையில்,  இந்தியாவின் போதைப்பொருளின் புகலிடமாக குஜராத் மாறி வருகிறது.  இதுதான் குஜராத் மாடல் என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

குஜராத் மாநிலத்தின் பரூச் மாவட்டத்தில் சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான 513 கிலோ போதைப்பொருட்கள் கொண்ட மூட்டைகளை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் ஒரு பெண் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை தெரிவித்து உள்ளது.

விசாரணையில் பரூச் மாவட்டத்தில் இயங்கி வரும் மருந்து தொழிற்சாலை ஒன்றில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய அதிரடி வேட்டையில், ரூ.100 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் கொண்ட மூட்டைகளை காவல்துறையினர் கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர். இது தொடர்ந்து ஒரு பெண் உள்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே அதானி துறைமுகம் மூலம் போதைப்பொருள் கடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது மருந்து தயாரிப்பு நிறுவனம் போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதான் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் மாடல் என்று எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்தியாவின் போதைபொருள் கடத்தல் கேந்திரமாக மாறிய அதானியின் குஜராத் துறைமுகம்! ரூ.376.5 கோடி மதிப்புள்ள  75 கிலோ ஹெராயின் பறிமுதல்

அதானி துறைமுகத்தில் 21000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் சிக்கிய விவகாரம்… மத்திய அரசு என்ன செய்கிறது ?காங்கிரஸ் கேள்வி