அரசு சலுகைகள், மானியங்கள் பெற இனி ஆதார் எண் கட்டாயம்!

Must read

டெல்லி: மத்திய, மாநில அரசின் மானியங்கள், சேவைகளைப் பெற ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) இப்போது அரசு மானியங்கள் மற்றும் சலுகைகளைப் பெறுவதற்கு பதிவுச் சீட்டில் ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கியுள்ளது. இந்த நடவடிக்கை UIDAI ஆல் ஆகஸ்ட் 11ந்தேதி  அன்று வெளியிடப்ப்டட  சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI ) அளித்த புள்ளிவிபரத்தின்படி, நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட 99 சதவீதம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆதார் சட்டப்பிரிவு 7ன்படி ஆதார் அட்டை பெறாதவர்கள், அரசு அளித்துள்ள இதர அதிகாரப்பூர்வ அடையாள அட்டை வாயிலாக சேவைகளைப் பெறுவதற்கு தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற் போது இதில், சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.  அதன்படி, மத்திய அரசின் சலுகைகளைப் பெற கட்டாயம் ஆதார் அட்டையை பயன்படுத்த வேண்டும். அப்படி ஆதார் அட்டை வழங்கப்படாத பட்சத்தில், ஆதார் அட்டைக்கு பதிவு செய்து அந்த எண்ணைப் பயன்படுத்தவேண்டும் என்று அறிவித்துள்ளது. அரசாங்க மானியங்கள் மற்றும் சலுகைகளைப் பெற இனி ஆதார் எண் அல்லது பதிவுச் சீட்டை நீங்கள் வைத்திருக்க வேண்டும் என யு.ஐ.டி.ஏ.ஐ. அனைத்து மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

நிரந்தர ஆதார் வரும்வரை, அந்த நபருக்கு ஆதார் பதிவு அடையாள எண் ஒதுக்கப்படும். அந்த ஸ்லிப்புடன் மாற்று அடையாள அட்டையைப் பயன்படுத்தி அவர் அரசின் பலன்கள், மானியங்கள் மற்றும் சேவைகளைப் பெறலாம்.

இவ்வாறு உதய் (UIDAI) தெரிவித்து உள்ளது.

More articles

Latest article