யூடியூப் சேனல் மூலம் சமூக வலைத்தளங்களில் பிரபலமான ரித்விக் O2 படத்தில் நயன்தாராவுக்கு மகனாக நடித்து திரையுலகில் நுழைந்தார், அடுத்ததாக ரஜினிகாந்துக்கு பேரனாக நடிக்க இருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – நெல்சன் – அனிரூத் கூட்டணியில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் மாஸ்டர் ரித்விக் நடிக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி இருக்கிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பதாக ஏற்கனவே செய்தி வெளியானது.

ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வரும் நிலையில் இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன் தவிர மலையாள நடிகர் விநாயகன், யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் நடிக்கிறார்கள் என்பதை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

இந்த நிலையில் தற்போது யூடியூபர் ரித்விக் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்களை அவரை வாழ்த்தி வருகின்றனர்.