இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா-வின் பிறந்தநாளான இன்று அவருக்கு ஏராளமான ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இசைஞானி இளையராஜா-வும் தனது இசையுலக வாரிசின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து செய்தி ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜானி படத்திற்காக 1979 ம் ஆண்டு இசையமைக்கும் பணிக்காக வெளியூர் சென்றிருந்த போது யுவன் பிறந்த செய்தி கிடைத்தது.

குடும்பத்தையும் குழந்தைகளையும் பெரிதாக நினைக்காமல் தொழிலே கதியாக இருந்த காலம் அது என்று இளையராஜா அதில் குறிப்பிட்டுள்ளார்.