வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகிவரும் ‘வாரிசு’ படத்திற்குப் பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படம் ‘தளபதி 67’.

இந்தப் படத்தில் விஜயுடன் 14 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை த்ரிஷா இணைந்து நடிக்க இருப்பதாக சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ‘தளபதி 67’ படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும், முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் சமந்தா நடிக்க இருப்பதாகவும் கிசு கிசுக்கப்படுகிறது.

‘வாரிசு’ படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அது கைநழுவி போனது, தற்போது தளபதி 67 ல் நடிக்க இருப்பது உறுதியானால் பைரவா மற்றும் சர்க்கார் திரைப்படத்திற்குப் பிறகு மூன்றாவது முறையாக விஜயுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் படமாக அவருக்கு அமையும்.