டெல்லி: வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களில் சொத்துக்களை வைத்து கடன் வாங்கும் வாடிக்கையாளர்கள், கடனை அடைத்த 30 நாள்களில், அவேர்களின் சொத்துப் பத்திரம் திரும்ப தர வேண்டும் இல்லையேல், சம்பந்தப்பட்ட வங்கி அல்லது நிதி நிறுவனம் தினசரி ரூ.5,000 தாமதக் கட்டணம் செலுத்த நேரிடம் என இந்திய ரிசர்வ் வங்கி அதிரடியாக அறிவித்து உள்ளது.

பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக வாங்கும் கடன்கள் மீது வங்கிகள், நிதிநிறுவனங்கள் பல்வேறு வகையில் கூடுதல் வட்டி மற்றும் அசல்களை வசூலித்து அடாவடி செய்து வருகின்றன. இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் குவிந்த நிலையில், பல்வேறு அதிரடிய நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுத்து வருகிறது. சமீபத்தில், வாடிக்கையாளர்கள் தாங்கள் பெற்றுள்ள கடனுக்கான வட்டி முறையை நிலையான வட்டி முறைக்கு மாற்றும் போது, மாதத் தவணைத் தொகையை மாற்றிக் கொள்ளவோ, தவணைக் காலத்தை அதிகரித்துக் கொள்ளவோ அல்லது இரண்டையுமே மாற்றியமைத்துக் கொள்ளவோ அவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப அனுமதிக்க வேண்டும் என நிதி நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இநத் நிலையில்,  சொத்தின்பேரில் கடன் வாங்கியுள்ள வாடிக்கையாளா் கடனை முழுமையாக அடைத்த 30 நாள்களில் அவரது அசையும், அசையாத சொத்துப் பத்திரம், ஆவணங்களைத் திருப்பி அளித்துவிட வேண்டும்; அப்படி அளிக்காமல் தாமதிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.5,000 தாமதக் கட்டணமாக வாடிக்கையாளருக்கு அளிக்க வேண்டும் என்று வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) உத்தரவிட்டுள்ளது.

பொதுவாக பொதுமக்கள் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில், கடன் வாங்கி வீடு, நிலம், வாகனங்கள் உள்ளிட்ட சொத்துகளை வாங்குபோது, தங்களது  சொத்துப் பத்திரத்தை வங்கிகள் அல்லது சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்கள் வைத்துக் கொள்வது வழக்கமாகும். கடனை முழுமையாக திருப்பிச் செலுத்திய பிறகு அந்த சொத்துப் பத்திரத்தை சம்பந்தப்பட்ட நபரிடம் திருப்பி அளிப்பது நடைமுறை. அதுபோல கடனில் இருந்து மீட்டுவிட்டதற்கான தடையில்லாச் சான்று பெறுவது கட்டாயமாகும்.

ஆனால், பல நிதி நிறுவனங்கள் கடனை அடைத்த பிறகு, அவர்களின் சொத்து பத்திரங்களை திருப்பி அளிக்காமல், கூடுதல் பணத்தை கட்ட வேண்டும் என்று கோல்மால் செய்து வருகின்றன. மேலும் தடையில்லா சான்றுகளையும் கொடுக்காமல் இழுத்தடித்து வருகின்றன. இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் கூறப்படுகின்றன.

இந்த நிலையில், கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ஆர்பிஐ செக் வைத்துள்ளது.

கடனைத் திருப்பிச்செலுத்திய பிறகு கடன் வாங்குபவர்களுக்கு சொத்து ஆவணங்களை சரியான நேரத்தில் வெளியிடுவதற்கான வழிகாட்டுதல்களை ஆர்பிஐ அறிமுகப்படுத்தி உள்ளது.

“புதிய வழிகாட்டுதலின்படி,

அசையும் அல்லது அசையா சொத்துக்கான அசல் ஆவணங்கள், அந்தச் சொத்திற்காக எடுக்கப்பட்ட கடனை முழுமையாகத் திருப்பிச் செலுத்திய 30 நாட்களுக்குள் வெளியிடப்பட வேண்டும். 

அந்த சொத்து தொடா்பான அடமானப் பத்திரம் உள்ளிட்டவை இருந்தால் அவற்றை ரத்து செய்வது உள்ளிட்ட அந்தக் கடன் தொடா்பான அனைத்து நடைமுறைகளையும் முடித்துவிட வேண்டும்.

தாமதம் ஏற்பட்டால், சொத்து ஆவணங்களை வெளியிடுவதில் தாமதம் ஏற்படும் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு நாளைக்கு ரூ. 5,000 இழப்பீடு வழங்கப்படும். 

அசல் சொத்து ஆவணங்கள் தொலைந்துவிட்டால் அல்லது சேதமடைந்தால், 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட சொத்தின் நகல்/சான்றளிக்கப்பட்ட நகல்களைப் பெறுவதற்கு ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்கள் கடன் வாங்குபவருக்கு உதவ வேண்டும்.

இந்த நடவடிக்கையானது, ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்கள் நிர்ணயிக்கப்பட்ட விதிகளுக்குக் கட்டுப்படுவதையும், கடன் வாங்குபவர்களுக்கு சொத்து தொடர்பான சிக்கல்கள் தொடர்பாக அதிக அளவிலான உதவிகளை வழங்குவதையும் உறுதிசெய்ய உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளா் கடன் பெற்ற குறிப்பிட்ட வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் கிளையில் மட்டும் ஆவணங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறாமல், அவா் விரும்பும் கிளை மூலம் ஆவணங்களைத் திருப்பி அளிக்கவும் வசதி செய்து தர வேண்டும்.

இது தொடா்பான விவரங்களைக் கடன் பெறும்போது அளிக்கும் கடிதத்திலேயே வங்கிகள் தெளிவாகக் கூறிவிட வேண்டும்.

கடன் பெற்றவா் இறந்துவிட்டால், அவரது சட்டப்படியான வாரிசுகளிடம் பத்திரங்களை ஒப்படைக்க வேண்டும்.

இது தொடா்பான நடைமுறைகளையும் முன்னதாகவே வாடிக்கையாளருக்கு கூறிவிட வேண்டும்.

எதிா்பாராதவிதமாக சொத்து ஆவணங்கள் சேதமடைதல், தொலைந்துபோவது போன்ற நிலை ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட வங்கிகள், அந்த வாடிக்கையாளா் மாற்று ஆவணம் பெறுவதற்கு உரிய உதவிகளை அளிக்க வேண்டும். இதற்கு 60 நாள்கள் கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம்

இவ்வாறு  கூறப்பட்டுள்ளது.

வங்கிகள் கடன்களுக்காக விதிக்கும் அபராத வட்டிகளுக்கு தடை! ரிசர்வ் வங்கி அதிரடி