சென்னை: அனைத்து வகையான பதிவுகளுக்கும் பிறப்புச் சான்றிதழை ஒரே ஆவணமாகப் பயன்படுத்தலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.

பிறப்புச் சான்றிதழ் என்பது புதிதாகப் பிறந்த குழந்தையின் பிறந்த தேதி, பிறந்த இடம், பாலினம் மற்றும் பெயரை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ அறிக்கையாகும். பிறப்புச் சான்றிதழ் ஒரு நபரின் சட்டபூர்வமான இருப்பை நிரூபிக்கிறது மற்றும் இந்த நிகழ்வைப் பதிவுசெய்வது அவர்கள் சேர்ந்த மக்களின் அடிப்படை முக்கிய தரவுகளின் ஆதாரமாகும்.  ஆனால், கடந்த சில ஆண்டுகளலாக அனைத்து வகையான நடவடிக்கைகளுக்கும் ஆதார் எண் கட்டாயம் என மத்தியஅரசு கூறி வந்தது.

இந்த நிலையில், அனைத்து வகையான பதிவுகளுக்கும் பிறப்புச் சான்றிதழை ஒரே ஆவணமாகப் பயன்படுத்தலாம் என மத்திய உள்துறைஅமைச்சகம் (Home Ministry) அறிவித்து உள்ளது.

அதன்படி, பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டம், 2023, கல்வி நிறுவனத்தில் சேர்க்கை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் பட்டியல் தயாரித்தல், ஆதார் எண், திருமண பதிவு ஆகியவற்றிற்கு பிறப்புச் சான்றிதழை ஒரே ஆவணமாகப் பயன்படுத்த அனுமதிக்கிறது.  இந்த புதிய நடைமுறை, அக்டோபர் 1 முதல் அரசு வேலை அமலுக்கு வருகிறது என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய  அரசின் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் செப்டம்பர் 13ந்தேதியிட்டு வெளியிட்டுள்ள அரசாணையில், அனைத்து வகையான பதிவுகளுக்கும் பிறப்புச் சான்றிதழை ஒரே ஆவணமாகப் பயன்படுத்தலாம் என  அறிவிக்கப்பட்டுள்ளது.