சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில்  டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் 3,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு இருப்பதாக சென்னை  மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளனர்.

தமிழ்நாட்டில் அவ்வப்போது மழை பெய்து வருவதுடன், பழைக்காலமும் தொடங்க உள்ளதால், பருவநிலை மாற்றம் காரணமாக பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன. சமீப காலமாக கொசுக்களால் பரவும் வைரஸ் தொற்று நோயான  டெங்கு காய்ச்சல் மற்றும் கண் நோய் அதிக அளவில் பரவி வருகிறது. சென்னை மதுரவாயலை சேர்ந்த 4 வயது சிறுவன் சிறுவன் உயிரிழந்த நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. கடலூரில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் தற்போது தீவிரமாகப் பரவி வருகிறது.

டெங்கு காய்ச்சல் உயிரிழப்பையும் ஏற்படுத்தும் என்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. இதையடுத்து கடந்த 12ந்தேதி (செப்டம்பர் 12ந்தேதி)  தலைமைச் செயலகத்தில்,  டெங்கு மற்றும் தொற்றுநோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து சென்னையில், மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் கூடுதல் தலைமை செயலாளர் ஆணையாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்போது,  சென்னையில், டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் 3,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்த, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், மழைநீர் தேங்க வாய்ப்புள்ள இடங்களை கண்டறிந்து கொசு புழுக்களை அழுத்திட  அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

மேலும்,  சாலைகள் மற்றும் வீடுகளில், டயர், உடைந்த பிளாஸ்டிக் பொருட்களை வைத்து கொசு உற்பத்திக்கு காரணமான நபர்களுக்கு அபராதம் விதித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வலியுறுத்தி இருப்பதுடன், கட்டுமானப் பணிகளில் தேங்கும் நல்ல தண்ணீரில் டெங்கு கொசுக்கள் பெருகுகின்றன. கட்டுமான நிறுவனங்கள், வியாபாரிகளிடம் ஆலோசனை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. காய்ச்சல் வந்தால் பொதுமக்கள் வீட்டிலேயே இல்லாமல் முறையான சிகிச்சை பெற வெண்டும் என தெரிவித்தார்.