நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘ஜெயிலர்’.

மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவராஜ்குமார், சுனில், தமன்னா, ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பான் இந்தியா படமாக உருவாகிவரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி ரிலீசாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகிவரும் மாவீரன் திரைப்படம் சுதந்திர தின விடுமுறையையொட்டி ஆகஸ்ட் 11 ம் தேதி வெளியாவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ரஜினிகாந்த் படமும் அதே தேதியில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.