ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் படம் லால் சலாம்.

இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

இதில் மொய்தீன் பாய் எனும் கேரக்டரில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்தின் தோற்றத்துடன் கூடிய இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

லைகா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ரஜினிகாந்த் மும்பை சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.