ஜெய்ப்பூர்:

ன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ. சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த பரிதாபகரமான சம்பவம் பாரதியஜனதா ஆட்சி செய்துவரும் ராஜஸ்தானில் நடைபெற்றுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் வசுந்தராஜே சிந்தியா தலைமையில் பாரதியஜனதா ஆட்சி நடைபெற்ற வருகிறது.

இங்குள்ள மண்டல்கார்க் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருப்பர் கீர்த்தி குமாரி. இவர் பாரதியஜனதா கட்சியை சேர்ந்தவர்.

ராஜஸ்தானில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் எம்எல்ஏ, கீர்த்தி குமாரியும் பன்றிக்காய்ச்சல் தாக்குதலுக்கு ஆளானார். அதைத்தொடர்ந்து அவர் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மேன் சிங் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் அங்கிருந்து ஜெய்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  12 மருத்துவர்கள் கொண்ட குழு அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில்,  எம்.எல்.ஏ. கீர்த்தி குமாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதையடுத்து அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனை வளாகத்தில்  திரண்டனர். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.

பன்றி காய்ச்சல் நோய் பாதிப்பால் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் உயிரிழந்திருப்பது ராஜஸ்தான் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பன்றி காய்ச்சால் காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் 5,715 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.