இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 42-வது லீக் போட்டி நேற்று புனேவில் நடைபெற்றது. புனே மற்றும் டெல்லி அணிகள் மோதின. இப்போட்டியில் புனே அணி (4-3) என்ற புள்ளி கணக்கில் டெல்லியை தோற்கடித்தது வெற்றி பெற்றது.

delhidynamos-m1ஆரம்பம் முதலே போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை. இரு அணிகளும் கோல் அடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் தீவிரமாக செயல்பட்டனர். 42-வது நிமிடத்தில் டெல்லி அணி தன்னுடைய முதல் கோலை பதிவு செய்தது. பின்னர் இரண்டாம் பாதியில் ஆக்ரோசமாக விளையாடிய புனே தன்னுடைய முதல் கோலை பதிவு செய்து பதிலடி கொடுத்தது.

புனே, அடுத்தடுத்து கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய மேலும் 3 கோல் அடித்து அசத்தியது. அதன் பின்னர் டெல்லி அணியால் 2 கோல்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால், 4-3 என்ற கோல் கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தி புனே வெற்றி பெற்றது

இன்று இரவு மும்பையில், மும்பை – கேரள அணிகள் விளையாட உள்ளன.