கிரிக்கெட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக தென்ஆப்ரிக்க வீரர் மீது குற்றச்சாட்டு

Must read

sport00007தென் ஆப்ரிக்கா – ஆஸ்திரேலியாவுக்கு இடையே ஹோபர்ட்டில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், பந்தை சேதப்படுத்தியதாக தென் ஆப்பிரிக்க கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் மீது ஐசிசி குற்றம் சாட்டியுள்ளது. இதில் அவர் வாயில் சுவிங்கம் மென்ற எச்சிலை கொண்டு பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டை டூபிளெஸ்ஸிஸ் மறுத்தாலும், நடுவர் ஆன்டி கிராப்ட் முன்னிலையில் விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் போட்டியில் ஒரு நாள் தடை அல்லது சம்பளத்தில் பெரும்தொகை அபராதமாக விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

More articles

Latest article