சென்னை: சென்னை சேப்பாக்கம் மேக் (MAC) ஸ்டேடியத்தில், நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையே ஐபில் போட்டி நடைபெற உள்ளது.

ஐபிஎல் 19-வது சீசன் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகளுக்கு இடையிலான 37-வது லீக் போட்டி நாளை (ஏப்ரல் 26, 2026) சென்னையில் உள்ள சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் பிற்பகல் 3:30 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த போட்டி ஸ்போர்ட்ஸ் ஸ்டார் மற்றும் இஎஸ்பிஎன் கிரிக்இன்போ போன்ற தளங்களில் நேரலையாக ஒளிபரப்பாகிறது.
நடப்பு ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய நட்சத்திர பேட்ஸ்மேனான ஆயுஷ் மாத்ரே காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ள நிலையில் நாளை போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் நடைபெற உள்ள சிஎஸ்கே போட்டிக்கான டிக்கெட்விற்று தீர்ந்த நிலையில், போட்டிகளை காண செல்லபவர்கள், அதற்கான டிக்கெட்டை காட்டி, சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
து ஐபிஎல் 2026 சீசன் தொடக்கம் முதலே சிஎஸ்கே அணி அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து. முதல் மூன்று போட்டிகளிலும் படுதோல்விகளை சந்தித்ததால், சிஎஸ்கே ரசிகர்களிடையே அதிருப்தியை எற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, டெல்லி மற்றும் கேகேஆர் ஆகிய அணிகளுக்கு எதிராக முதலில் களமிறங்கி, அடுத்தடுத்து வெற்றியைப் பெற்றனர்.
ஆனால் அடுத்த போட்டியில், சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராகவும் முதலில் களமிறங்கி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், அதை நிவர்த்தி செய்யும் வகையில், அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதலில் களமிறங்கி 103 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றுள்ளனர். இதனால் மீண்டும் சிஎஸ்கே உயிர்த்தெழுந்துள்ளது என பாராட்டப்பட்டது. இதுவரை சிஎஸ்கே ஆடிய 7 போட்டிகளில் 3 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. இதனால், +0.118 நெட் ரன்ரேட்டுடன் 5ஆவது இடத்தில் உள்ளது. இன்னமும் 7 போட்டிகள் மீதம் இருக்கிறது. இதில் வெற்றி பெறுவதன்மூலமே, சிஎஸ்கேவுக்கு பிளே ஆப் வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.
பிளேஆப் போட்டிகளில் கலந்துகொள்ள , அடுத்த 7 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ள நிலையில், நாளை சென்னையில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோத தயாராகி வருகிறது.
இதற்கிடையில் இன்று (ஏப்.24) பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கும் 34-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சை சந்திக்கிறது. கடந்த தோல்வியை மறந்து இரு அணிகளும் வெற்றி பெற கடுமையாக போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து நாளை, சென்னையில் நடைபெறும் போட்டியில் குஜராத் அணியை சிஎஸ்கே எதிர்கொள்கிறது. ஞாயிறு பிற்பகல் 3.30 மணிக்கு போட்டி தொடங்கும் நிலையில், வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். / இதற்காக சிஎஸ்கே வீரர்கள் நேற்றே (ஏப்ரல் 24) சென்னை வருமக தந்தனர். தற்போது தீவிர பயிற்சியில் ஈடடுபட்டு வருகின்றனர். சிஎஸ்கே அணியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், அடுத்து நடைபெறும் போட்டிகளில் மூத்த வீரர் தல தோனி களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
[youtube-feed feed=1]