மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி அருகே உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு காலையிலேயே வந்த ஒருவர் நீண்ட நேரமாக ஒரே இடமாக நின்றுகொண்டிருந்துள்ளார்.

கடுமையான வெயில் அடித்தபோதும் எங்கும் அசையாமல், யாரிடமும் எதுவும் பேசாமல் அங்கேயே இருந்துள்ளார்.

பிற்பகல் 2 மணியளவில் அந்த வாக்குச் சாவடிக்கு வாக்களிக்க வந்த ஒரு பெண்ணைப் பார்த்ததும் ஆவேசமாக ஓடிய அவர் அந்தப் பெண்ணை தலைமுடியைப் பிடித்து இழுத்து, பின்னால் இருந்து இறுகப் பிடித்து சண்டையிட்டதுடன் அவரிடம் இருந்த வாக்காளர் அடையாள அட்டையை பறிக்க முயற்சி செய்தார்.

இந்த களேபரத்தைக் கண்ட பாதுகாப்பு படையினர் ஓடி வந்து அந்தப் பெண்ணைக் காப்பாற்றியதுடன், அந்த நபரையும் கட்டுப்படுத்தினார்கள்.

பின்னர் அவரிடம் விசாரித்ததில், அந்தப் பெண் அவரது மனைவி என்றும் 2 ஆண்டுகளுக்கு முன் வேறு ஒரு நபருடன் ஓடிப்போனதும் தெரியவந்தது.

SIR கெடுபிடியால் வாக்குச் சாவடியை மாற்றியிருக்க வாய்ப்பில்லை எப்படியும் வாக்களிக்க இங்குதான் வருவாள் என்று கணக்கு போட்டுக் காத்திருந்ததுள்ளார்.

சிக்கிய மனைவியிடம் கணவன் என்ற இடத்தில் இருந்து தனது பெயரை நீக்க வேண்டும் என்று குஸ்தியில் இறங்கினார்.

ஆனால், உங்கள் குடும்ப சண்டையை தீர்க்க நாங்கள் உதவ முடியாது என்று கூறிய தேர்தல் அலுவலர்கள் இருவருக்கும் இடையே சுமார் 20 நிமிடம் நடந்த இந்த குஸ்தியை நிறுத்தியதுடன் பாதுகாப்புடன் அந்தப் பெண்ணை வாக்களிக்க அனுமதித்தனர்.

இதனால் மேலும் கொதிப்படைந்த அந்த நபர் அங்கிருந்தவர்களை சபித்தபடி நடையை கட்டியுள்ளார்.

தங்களது அனுபவத்தில் இதுபோன்ற ஒரு சம்பவத்தை பார்த்ததில்லை என்று அந்த வாக்குச் சாவடியில் இருந்த அதிகாரிகள் அங்கலாய்த்துக்கொண்டனர்.

[youtube-feed feed=1]