சீன ஓபன் பாட்மிண்டன்: தொடர் வெற்றி; பி.வி.சிந்து அரை இறுதிக்கு தகுதி

Must read

sindhu-151சீனாவில் நடைபெற்று வரும் சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து அரை இறுதிக்கு தகுதிபெற்றுள்ளார். நேற்று புஜெள நகரில் நடைபெற்ற அரைஇறுதி தகுதி ஆட்டத்தில், பிங்ஜியா என்ற சீன வீராங்கனையை 22-20, 21-10 என்ற செட் கணக்கில் தோல்வியடைய செய்தார்.

முன்னதாக கால்இறுதி தகுதி போட்டியின் போது, பிவென் ஹெங்க் என்ற அமெரிக்க வீராங்கனையை 8-21, 22-20, 21-17 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த அரை இறுதிப்போட்டியில் சங் ஜி ஹியூன் என்ற தென் கொரிய வீராங்கனையுடன் விளையாட இருக்கிறார் பி.வி.சிந்து.

நேற்று நடந்த ஆடவர் போட்டியில், இந்தியாவின் ஜெயராம், சென்லாங் என்ற சீன வீரரிடம் 15-21, 14-21 அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

More articles

Latest article