ஒரே உபகரணத்தில் பலருக்கு ஆஞ்சியோ சிகிச்சை: மருத்துவமனைகள் அட்டூழியம்

Must read

மும்பை:

மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்டும் சில வகை உபகரணங்கள் மறுபயன்பாட்டுக்கு த குதியற்றதாக வகை பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நோயாளிக்கும் இந்த உபகணத்தை புதிதாக தான் பயன்ப டுத்த வேண்டும் என்று மருத்துவ விதிமுறைகள் உள்ளது. இத்தகைய பொருட்கள் பயன்பாட்டிற்கு பிறகு அழிக்கப்பட வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், சில தனியார் மருத்துவமனைகள் இத்தகைய உபகரணங்களை நோயாளிக்கு தெரியாமல் மறுபயன்பாடு செய்து வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக மாரடைப்புக்கு மேற்கொள்ளப்படும் ஆஞ்சியோ சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் வடிகுழாய்கள், வழிகாட்டி கம்பிகள், பலூன்கள் போன்றவற்றை பல நோயாளிகளுக்கு பயன்டுத்துவாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதோடு, நோயாளியிடம் புதிய உபகரணத்திற்கான கட்டணத்தை வசூல் செய்து கொண்டு, ஏற்கனவே வேறு ஒரு நோயாளிக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையே பயன்படுத்தி, தலா ரூ. 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை கொள்ளை லாபம் அடிப்பது அம்பலமாகியுள்ளது. இதனால் பணத்தையும் பறிகொடுத்துவிட்டு, கிருமி தொற்று ஆபத்தையும் நோயாளி சுமக்க நேரிடுகிறது.

இருதய அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் ஒரு முறை பயன்படுத்திய பிறகு அதை கண்டிப்பாக அழித்துவிட வேண்டும் என்று மத்திய சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த உபகரணங்கள் ஒரு முறை பயன்பாட்டிற்கு மட்டுமே உகந்ததாகும். இந்த உபகரணங்களை சுத்தம் செய்து மீண்டும் வேறு நோயாளிக்கு பயன்படுத்தி முழு தொகையையும் வசூல் செய்யப்பட்டு வருவதாக புகார் வந்தது.

இதையடுத்து மத்திய சுகாதார திட்டத்தின் கீழ் வரும் மருத்துவமனைகளில், குறிப்பாக இருதய அறுவை சிகிச்சை மற்றும் சில சிறப்பு வாய்ந்த சிகிச்சைகளுக்கு உபகரணங்களை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சுகாதார துறை எச்சரித்தது. ஆனால், பெரிய அளவில் செயல்படும் கார்பரேட் மருத்துவமனைகள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில் நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசு மவுனம் காத்து வருகிறது.

மேலும், எந்தெந்த உபகரணங்கள் அழிக்கப்பட வேண்டியது என்பது அதன் பேக்கிங்கில் தெளிவாக குறிப்பிடப்பட் டுள்ளது. அதை சுத்தம் செய்து மறுமுறை பயன்படுத்தக் கூடாது என்பது கட்டாயம். சில இருதய அறுவை சிகி ச்சை நிபுணர்கள் சில உபகரணங்களை மறுமுறை பயன்படுத்துவதால் பாதிப்பு ஏற்படாது என்று கருத்து தெரிவி க்கின்றனர்.

உபகரண நிறுவனங்கள் விற்பனையை அதிகரிப்பதற்காக மறு பயன்பாட்டிற்கு தடை விதிக்கின்ற என்று தெரிவிக்கின்றனர். லாபம் எதிர்பார்க்காத எய்ம்ஸ் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையங்களில் இது சாத்தியம் என்றும், இதர மருத்துவமனைகளில் மறுபயன்பாடு என்பது சகஜமான விஷயமாக இருக்கிறது.

ஒரு டாக்டர் சங்கிலி தொடர் மருத்துவமனைகளில் தொடர்ந்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் போது இத்தகைய உபகரணங்களின் மறுபயன்பாடு என்பது 4 முதல் 5 முறை வரை நீடிக்கிறது. செலவை கட்டுப்படுத்துவதற்காக இத்தகைய விதிமீறல் நடக்கிறது. மருத்துவமனை நிர்வாகமும் டாக்டர்களுக்கு அழுத்தம் கொடுத்து மறுபயன்பாட்டை திணிக்கிறது. உபகரணங்களை மீண்டும் பயன்படுத்துவது அவ்வளவு நல்லதல்ல.

இது நோயாளிக்கு இழைக்கப்படும் அநீதி என்பதோடு, இது கிரிமினல் குற்றமாகும். இந்த மோசடி பல தனியார் மருத்துவமனைகள் ஈடுபட்டு வருகிறது. இதை எளிதாக அரசு விசாரித்து கண்டுபிடித்து விட முடியும். எத்தனை ஆஞ்சியோ செய்யப்பட்டுள்ளதோ அதற்கு ஏற்பட கொள்முதல் பட்டியலை கேட்டாலே மருத்துவமனை நிர்வாகங்கள் சிக்கி கொள்ளும். ஒரு ஆஞ்சியோவுக்கு எத்தனை உபகரணங்கள் பயன்படுத்த வேண்டும் என்ற கணக்கு உள்ளது. ஏழை மக்களின் செலவை குறைப்பதற்காக இவ்வாறு மறு பயன்பாடு செய்வதாக சில மருத்துவமனைகள் சப்பை கட்டு கட்டுகிறது.

More articles

Latest article