சென்னை,

ங்கியில் வாரத்திற்கு 24 ஆயிரம் மட்டுமே எடுக்கப்பட்டு வந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு இன்று முதல் வாரத்திற்கு ரூ.50ஆயிரம் வரை எடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.

நோட்டு செல்லாது  நவம்பர் 8ந்தேதி மத்திய அரசு அறிவித்தது.அதைத்தொடர்ந்து  உயர்மதிப்புடைய ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது.

அதைத்தொடர்ந்து நாடு முழுவதும் பணப்புழக்கம் தடைபட்டது. பணம் இல்லாமல் வங்கிகளும், ஏடிஎம் வாயில்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. பல இடங்களிலும் போராட்டம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து தற்போது நிலைமை ஓரளவு சீரடைந்து வந்த நிலையி, வங்கிகளில் வாரம்  24 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க ரிசர்வ் வங்க கட்டுப்பாடுகளை விதித்தது.

தற்போது அந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வாரத்திற்கு 50,000 வரை எடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. மேலும், மார்ச் 13ம் தேதியில் இருந்து வங்கியில் பணம் எடுக்க எந்த வரம்பும் இருக்காது என்றும் ஏற்கனவே ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.