திருச்சி மத்தியச்சிறையில் விசாரணைக் கைதி தற்கொலை

Must read

திருச்சி,

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சியை அடுத்த சமயபுரம் அருகே உள்ள நரசிங்கமங்கலத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 32) விசாரணை கைதி. பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியதாக அவர்மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சம்பவத்தன்று திருச்சி மத்தியசிறையில் பழனிசாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

விசாரணை கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More articles

Latest article