திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ள விண்வெளி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்லும் 4  வீரர்களுக்கு இறைக்கைகளை வழங்கி அவர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் தனது திட்டத்திற்கு ககன்யான் எனப் பெயரிட்டுள்ளது.  ககன் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு வானம் என்று பொருள். வானத்தை நோக்கிச் செல்லும் வாகனம் என்ற பொருளில் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ககன்யான் (Gaganyaan விண்கலம்) இந்திய விண்கலத்தின் மூலம் பூமியின் தாழ் வட்டப்பாதைக்கு மனிதர்களை அனுப்பி, அவர்களை பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவது தான் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். இந்த விண்கலத்தில் மூன்று பேர் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலத்தின் முதற்கட்ட சோதனை கடந்த ஆண்டு (2023) வெற்றிகரமாக நடைபெற்றது. 

ககன்யான் திட்டத்தின் மூலம் வரும் 2025ஆம் ஆண்டில்,  இந்திய விண்வெளி ஆய்வாளர்கள் விண்வெளி ஆய்வுக்காக அனுப்பப்படுவார்கள். இந்த ககன்யான் விண்கலம், ராக்கெட் ஏவும் வாகனம் மார்க் -3 (LVM-3) மூலம் செலுத்தப்படும் இந்திய விண்வெளி வீரர்கள் பூமியில் இருந்து 400 கி.மீ சுற்றுப்பாதையில் 3 நாட்கள் ஆய்வு செய்வார்கள். பிறகு மீண்டும் பூமியில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டு இந்திய கடற்பரப்பில் விழச் செய்து மீட்டு வரப்படுவார்கள்.

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விண்வெளி நிலையமான, விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கு  இன்று காலை வருகை தந்த பிரதமர் மோடி  அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், ககன்யான் திட்டத்திற்காக தேர்வான 4 விண்வெளி வீரர்கள் பெயர் அறிவித்தார்.  இன்று காலை 10.45 மணியளவில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கு சென்று ஆய்வு செய்ததுடன்,   இந்திய விண்வெளித் துறையில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தும் வகையில் 3 முக்கியமான விண்வெளி உள்கட்டமைப்புத் திட்டங்களை கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து, ககன்யான் திட்டத்திற்காக தேர்வான 4 விண்வெளி வீரர்கள் பெயர் அறிவித்தார். அதன்படி,  பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப், சுபான்ஷு சுக்லா. இவர்கள் 4 பேரும் அடுத்த ஆண்டு விண்வெளிக்கு சென்று திரும்ப உள்ளனர்.

இந்த திட்டத்தின்படி விண்வெளிக்கு செல்ல உள்ள 4 வீரர்களின் பெயர்களை அறிவித்த பிரதமர் மோடி அவர்களை அறிமுகம் செய்து வைத்தார்.   ககன்யான் திட்டத்தின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்து விண்வெளி வீரர்களுக்கு விண்வெளி வீரர்களின் இறக்கைகளை வழங்கினார்.

ககன்யான் திட்டத்தில் விண்வெளி செல்லும் 4 வீரர்கள் 

-பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர்,குரூப் கேப்டன்
-அஜித் கிருஷ்ணன், குரூப் கேப்டன்
-அங்கத் பிரதாப்,குரூப் கேப்டன்
-சுபான்ஷு சுக்லா, விங் கமாண்டர்

ககன்யான் திட்டத்திற்காக தேர்வான விண்வெளி வீரர்களுக்கு பேட்ஜ்கள் வழங்கினார் பிரதமர். 4 பேரும் இந்திய விமானப்படையின் விமானிகள், அதில் ஒருவர் கேரளாவைச் சேர்ந்தவர்.

ககன்யான் மிஷன் இந்தியாவின் முதல் மனித விண்வெளி விமானத் திட்டமாகும், இதற்காக பல்வேறு இஸ்ரோ மையங்களில் விரிவான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

நிகழ்ச்சியில் இஸ்ரோவின் செயல்பாடுகளை பாராட்டி பேசிய பிரதமர் மோடி, விண்வெளிக்கு செல்ல உள்ள நமது  “நமது விண்வெளி வீரர்களுக்கு மரியாதை செய்யும் வகையில்  அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்…” என கூறினார். இதையடுத்து அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினர்.

Photo and Video: Thanks ANI